சீனாவுக்கு இலவச தடுப்பூசி கொடுக்க தயார்: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு!

புதன், 4 ஜனவரி 2023 (12:01 IST)
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இலவச தடுப்பூசிகள் தயார் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. 
 
சீனாவில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கானோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அதே போல் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன 
 
அந்த நிலையில் சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பாக தடுப்பூசிகளை இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
 
ஐரோப்பிய யூனியனின் இந்த அறிவிப்புக்கு சீனா என்ன பதில் கூறப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்