சமீபத்தில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் நடைபெற்றது என்பதும் இந்த தேர்வுகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்பதும் தெரிந்ததே
தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும் இந்த தேர்வு நடைபெற்றதை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை அடுத்து யுபிஎஸ்சி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என யுபிஎஸ்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது
நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை அனுமதித்ததை போலவே யுபிஎஸ்சி தேர்வையும் அனுமதிக்க வேண்டும் என அந்த பிரமாண பத்திரத்தில் யுபிஎஸ்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நீட், ஜே.ஈ.ஈ தேர்வுகளை போலவே யுபிஎஸ்சி தேர்வையும் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா என்பது இந்த வழக்கின் தீர்ப்பில் தான் தெரியவரும்