ஒரே ஒரு அறிக்கையால் 97,000 கோடியை இழந்த அதானி.. அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (11:20 IST)
ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தொழில் அதிபர் அதானி தெரிவித்துள்ளார். 
 
அதானி குழும்பத்தின் மதிப்பை குலைக்கும் வகையில் உள்நோக்கத்தில் ஆதாரம் மற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க்  வெளியிட்டுள்ளது என்றும் எங்கள் வீழ்ச்சியில் இருந்து ஹிண்டன்பர்க்  ஆதாயம் அடைய முயற்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிகள் இறங்கியுள்ளோம் என்றும் அதானி தெரிவித்துள்ளார் 
 
அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க்  என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 97 ஆயிரம் கோடி சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்