இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார் கெளதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறறார்.
இந்த நிலையில், இதுகுறித்து அதானி முதன் முறையாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், நானும் , பிரதமர் மோடியும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். என் தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த கொள்கைகள் காரணம் எனவும், நரசிம்ம ராவ் (1991)பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த பொருளாதாரம் மாற்றம் மற்றும் வெவ்வேறு காலத்தில் பல அரசியல் தலைவர்கள் கொண்டு வளர்ச்சியால் மற்ற தொழிலதிபர்களைப் போல் நானும் பலனடைந்தேன். இதற்கு தனிப்பட்ட தலைவர் யாரும் காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.