தன்னை 3 பேர் பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகை பூஜா மிஸ்ரா பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்குபவர் நடிகை பூஜா மிஸ்ரா. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பிரபலம். இவர் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் வாடிக்கை. இந்நிலையில் தற்போது அவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக ஜெய்பூருக்கு சென்றபோது அங்கு அவர் தன்னை 3 பேர் பலாத்காரம் செய்ததாக கூறியதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியை படமாக்க உடன் வந்த 3 கேமராமேன்கள் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.