வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (20:23 IST)
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
தற்போது அனைத்து மத்திய திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. கேஸ் சிலிண்டர் முதல் வங்கி கணக்கு வரை அனைத்தும் ஆதார் எண் கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
மேலும் இதனால் வரி செலுத்துபவர்களின் வங்கி கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகள் எளிதில் கண்காணிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்த நடைமுறை அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பான் கார்டு பெறவும் ஆதார் எண்னை அவசியமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்