சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்; மத்திய அமைச்சகம்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:46 IST)
பெரம்பூரில் அதி நவீன ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும், ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  தாக்கல் செய்தார்.
 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
ரயில்வே துறையில் ரூ.1,48,528 கோடி முதலீடு செய்யப்படும். 12,000 ரயில் வாகன்கள் மற்றும் 5,160 ரயில்பெட்டிகள் வாங்கப்படும். மேலும் ரயில் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் 600 பெரிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும். 
 
 


ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கேலெட்டர் வசதி செய்து தரப்படும். ரயில் நிலையங்களில் வைபை வசதி மேம்படுத்தப்படும். பெங்களூருவில் 17000 கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
 
2019-க்குள் 4000 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 
 
3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே வழிதடங்கள் மேம்படுத்தப்படும். 
 
சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும் என்று நிதிமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்