ஜிஎஸ்டி யில் பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படமாட்டாது என கருதப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இருக்காது என்றும், கடினமானதாகவே இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சூசகமாக கூறியுள்ளார்.
வருமான வரி செலுத்தும் சாமானியர்களுக்காக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும் 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நூறு நாள் வேலை திட்டம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், பயிர் காப்பீடு ஆகிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.