’800 ரூபாய்’ குர்தாவுக்கு ஆசைப்பட்டு....’ 80 ஆயிரம்’ பணத்தை இழந்த பெண் !

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (20:31 IST)
பெங்களூரில்  வசிக்கும் பெண் ஒருவர், இ- காமர்ஸ் என்ற மொபைல் ஆப்பை, தனது செல்போனில் டவுன்லோடு செய்துள்ளார். அது போலியானது என தெரியாமல் அதில்  சென்று , அதன் மூலமாய் பொருட்களை வாங்கவும் நினைத்தார்.
அப்போது, அவருக்கு , ஒரு நோட்டிபிகேசன்  வந்துள்ளது. அதில் ஒரு குர்தா 800 ரூபாய் என்று விலை குறிப்பிட்டுள்ளது.அதில் அழகாக உள்ளதாக நினைத்த அவர், அதைப் பெற ஆர்டர் போட்டார்.
 
அப்போது, அவரது அக்கவுண்டில் இருந்து பணம் மைனஸ் ஆனதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஆனால், குர்தா வரவில்லை. பின்னர், அவரது அலைபேசிக்கு ஒரு கால் வந்துள்ளது. அதில், தனது வங்கி விவரங்கள் அனைத்தையும் கூறியுள்ளார்.
 
இதையடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 70,600 எடுக்கப்பட்டிருந்த மெசேஜ் வந்ததும் பதறிப்போனார். 
 
இதுகுறித்து அப்பெண் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்