போதையில் போலீஸ் பைக்கை தூக்கிய பலே ஆசாமி!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (20:10 IST)
சென்னையில் போதையில் இருந்த நபர் ஒருவர் போலீஸின் பைக்கையே எடுத்து சென்றுள்ளார்.

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண். ஆயுதப்படை காவலரான அருண் கிண்டி போலீஸ் நிலையத்தில் தன் பைக்கை நிறுத்தி விட்டு சென்றிருக்கிறார். திரும்ப வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல் நிலையத்திலேயே புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இரவு நேரத்தில் பைக்கை ஒருவர் தள்ளி செல்வதை கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெருங்களத்தூரை சேர்ந்த அருண்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

அவரை பிடித்து விசாரிக்கையில் தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக பைக்கை போலீஸ் பறிமுதல் செய்ததாகவும், பிறகு பைக்கை எடுத்து செல்லும் போது போதையில் மாற்றி எடுத்து வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்