60 வயது பாட்டிக்கு 15 வயது சிறுவனை திருமணம் செய்து வைக்க முயற்சி!!

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (16:53 IST)
அசாமில் 15 வயது சிறுவனுக்கு 60 வயது பாட்டியை திருமணம் செய்துவைக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அசாமில் 15 வயது சிறுவன் ஒருவன், தன் நண்பருக்கு போன் செய்துள்ளார். அவன் தவறுதலாக ஒரு நம்பரை மாற்றி போடவே, அந்த கால் வேறு ஒரு பெண்மணிக்கு சென்றுள்ளது.
 
மறுமுணையில் பேசிய பெண்ணின் குரல் இனிமையாக இருந்ததால், அந்த சிறுவன் தொடர்ந்து அந்த பெண்மணியுடன் பேசி வந்துள்ளார்.
 
இதனையடுத்து இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி அந்த பெண்மணியை சிறுவன் நேரில் சந்தித்தபோது பேரதிர்ச்சியடைந்தான். ஏனென்றால், இதுநாள் வரை அவன் பேசியது இளம்பெண்ணிடம் அல்ல, 60 வயது மூதாட்டியிடம்.. அப்போது மூதாட்டியின் உறவினர் சிறுவனுக்கு மூதாட்டியை திருமணம் செய்துவைக்க முயற்சித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த மூதாட்டி திருமணத்தை நிறுத்திவிட்டார்.
 
அந்த சிறுவனும் விட்டால் போதும் என அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடிவிட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்