9 ஆண்டுகளாக நுரையீரலில் கிடந்த பேனா: பரிதவித்த இளம்பெண்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (14:42 IST)
பெங்களூருவை சேர்ந்த ரேணுகா (19) என்ற அந்த இளம்பெண் அடிக்கடி சளித்தொல்லை, இருமல் ஏற்படுவதாகவும், அவை  மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில் இருப்பதாகவும் கூறி, பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி மார்பக நோய் சிகிச்சை  மையத்தில் சிகிச்சைக்கு சென்றார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு அவதிபடுவதாகவும் தெரிகிறது.

 
ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள் திடுக்கிட்டனர். இதற்கு காரணம் நுரையீரலில் பேனா ஒன்றின் பாகங்கள் சிதைந்த  நிலையில் உள்ளதை கண்டுபிடித்தனர். நீண்ட நாட்களாக இந்த பேனா நுரையீரலில் தங்கியதால் உள்ளுறுப்புகள் மிகவும்  சிதைந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண், சளித்தொல்லை, இருமலால் அடிக்கடி பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, சளி வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவதற்கு இதுவே காரணம் என தெரியவந்தது. இதனால்  மருத்துவர்கள் சிகிச்சை செய்து, அந்த பேனாவை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இவர்களது இந்த சாதனை தென்னிந்திய  மருத்துவ வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்