ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 81% ஆதரவு.. 2029 முதல் ஆரம்பமாகுமா?

Siva
புதன், 24 ஜனவரி 2024 (07:36 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு 81% ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. 
 
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில்  இது குறித்து அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் இருந்து வந்த கருத்துக்களில் 81% பேர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் 46 கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பில் 17 கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து 2029 ஆம் ஆண்டு முதல்  ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்