சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் 7 பேர் பலி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:04 IST)
ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்கு வந்த 7 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நெல்லூரில் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்ட நிகழ்ச்சியை தயார் செய்திருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசிய நிலையில் ஏராளமானோர் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து சந்திரபாபு நாயுடு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்குவதாகவும், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதும் ஏற்பதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்