BSNLல் 5G சேவை எப்போது? தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (14:13 IST)
BSNLல் 5G சேவை எப்போது? தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தகவல்
இந்தியாவில் இன்று 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று தெரிகிறது
 
குறிப்பாக வரும் தீபாவளி அன்று ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தெரிவித்துள்ளார்
 
மேலும் அடுத்த ஆறு மாதங்களில் 200 நகரங்களில் 5ஜி சேவை அமல்படுத்தப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 80 முதல் 90 சதவீதம் பகுதிகளுக்கு 5ஜி சேவை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது33
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்