15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது