காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது: கர்நாடக அரசு திட்டவட்டம்

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:44 IST)
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு திட்டமிட்டமாக கூறியுள்ளது. 
 
காவிரியின் நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் மழை பொழிவுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 
 
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர வந்தவுடன் முடியாத பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி  நீர் திறக்க  டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர் தொடர்பாக  ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரையை காவிரி  மேலாண்மை ஆணையம் ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்