இந்தியாவில் நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (13:44 IST)
இந்தியாவில் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல் நடக்கிறது. அந்த கடற்கரைகளுக்கு செல்ல அனைவரும் அனுமதி வழங்கப்படுவதில்லை.


 

 
இந்தியாவில் உள்ள 5 கடற்கரைகளில் மட்டும் நிர்வாணக் குளியல் நடக்கிறது. ஆனால் அங்கு அனைவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. 
 
நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரைகள்.
 
அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவு
 
சுற்றுலாப் பயணிகளின் சொர்க பூமியான கருதப்படும் இந்த கடற்கரையில் அரை நிர்வாணக் குளியல் சகஜமான ஒன்று. நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி இங்கு வருவது வழக்கம்.
 
ஓம் கடற்கரை, கோகர்ணா
 
கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த கடற்கரை, இரண்டு மிகப்பெரிய நன்னீர் ஊற்றுகளும் அழகான செம்பவளப் பாறைகளும் நிறைந்த இடம். இந்தக் கடற்கரை, ஓம் என்ற எழுத்தின் வடிவத்தில் இருப்பதாலேயே இப்பெயர் பெற்றது. அரை நிர்வாணத்தில் சூரியக் குளியல் செய்பவர்களுக்கு சரியான இடமாகத் திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பெரிதாக ஆடைக்கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. 
 
பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா
 
இந்தக் கடற்கரையும் கர்நாடக மாநிலத்தில் தான் உள்ளது. இங்கும் நிர்வாணமாகக் குளிப்பவர்கள் ஏராளம். நிலப்பரப்பு வழியாக அவ்வளவு எளிதாக இந்த கடற்கரைப்பகுதிக்குச்  செல்லமுடியாது. சிறுபடகுகளில்தான் செல்ல வேண்டும். அங்கு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் படகோட்டிகளே கூச்சத்தில் கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு நிர்வாணக் காட்சிகள் நிரம்பிவழியும் கடற்கரை தலமாம்.
 
 
மராரி கடற்கரை, கேரளா
 
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள இந்த கடற்கரை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அழகுடையது. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்திலிருந்து இந்த கடற்கரை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. நிர்வாணமாகத் திரிந்தாலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வெளியே தெரியாத அளவுக்கு, தள்ளியிருக்கும் பாதுகாப்பான பகுதி இது.
 
ஓஸ்ரன் கடற்கரை
 
கோவாவில் இப்படியொரு கடற்கரை பிரதேசம் இருப்பது பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்குத் தெரியாது. மிகவும் மறைமுகமான இடமாக இந்த ஒஸ்ரான் கடற்கரை இருந்து வருகிறது. கோவாவில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களிலிருந்து இந்த கடற்கரை வெகு தொலைவில் உள்ளது. அதனால் இந்த கடற்கரையிலும் நிர்வாண குளியல் சகஜம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்