ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கு: 4 பேர் கைது

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:29 IST)
ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது 
 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே 9 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் பதிமூன்று என்றும் இந்த வழக்கை கண்காணிக்கும் கூடுதல் காவல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
இந்த கொலை தொடர்பாக பல்வேறு சோதனை நடத்தப்பட்டது என்றும் அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்