கொரோனா 2-வது அலைக்கு 244 டாக்டர்கள் மரணம்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (09:30 IST)
கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,78,719 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,15,96,512 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 33,53,765 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 18,44,53,149 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பீகாரில் அதிகபட்சமாக 69 மருத்துவர்களும், உத்திரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்