பசுவின் வயிற்றில் 100 கிலோ குப்பை

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (20:56 IST)
குஜராத்தில் பசு வயிற்றில் இருந்து 100 கிலோ இருந்துள்ளது. இதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

 
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பசு வயிற்றில் இருந்து 100 கிலோ அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்துள்ளது. இதைக்கண்டு மருந்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அந்த பசு ஜிவ்தா அறக்கட்டளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பசுவின் வயிறுப் பகுதி வீக்கமுடன் காணப்பட்டது. முதலில் பசு கர்ப்பமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர். 
 
அதனால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது 100 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக், இரும்புக் கம்பிகள், மின்சார ஒயர்கள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டது.
அடுத்த கட்டுரையில்