காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதை அடுத்து, மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் தீவிரமாக மல்லிகார்ஜூன கார்கே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். நேற்று திடீரென அவர் பிரச்சார மேடையில் இருந்து மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி உடனே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியை பதவியில் இருந்து அகற்றும் வரை சாக மாட்டேன் என்று ஆவேசமாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்திருந்தாலும், மோடியின் மனிதநேயத் தருணம் அரசியல் வட்டாரங்களில் பாராட்டை பெற்றிருக்கிறது.