குதிரைதான் வண்டியை இழுக்கனும்... மத்திய அரசை சுட்டும் பா. சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (08:20 IST)
ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து. 

 
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன.  இதன் பிறகு பொருளாதார ரீதியாக ஜமு காஷ்மீர் பின்னடைந்துள்ளது.
 
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று அங்குள்ள அரசிய தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இதனிடையே முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, 
 
ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என விமர்சனம் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்