இந்த பரிசு எனது பிறந்த நாளில் எனது தந்தையின் பரிசளிப்பு என்கிறான் அஜய்.
அதைப் பார்த்த சரண் தனது தந்தை இதே போல் நமக்கு ஒரு பரிசு தரவில்லையே என்ற ஏக்கத்துடன் முகம் வாடி வீட்டில் அமர்ந்திருக்கிறான்.
பேரன் சரணின் முகத்தைப் பார்த்த பாட்டி விசாரிக்கும் போது அந்த ரிமோட் கார் ஆசையைக் பற்றி சொல்கிறான்.
இதைப் பார்த்த தாத்தாவும் தன் பேரனுக்கு அந்தக் காரை வாங்கிக் கொடுக்க விரும்புகிறார்.
தாத்தா ஜனகராஜ் அந்த ரிமோட் கார் விலையை கடையில் விசாரித்த போது அந்த ரிமோட் காரின் விலை 800 ரூபாய் என்கிறார் கடைக்காரர்.
தன் பேரனுக்கு எப்படியாவது அந்த காரை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காமல் போக
கடைசியாக தனது இளமைக்காலத்தில் சைக்கிள் ரேஸ் போட்டியில் வென்று பரிசாக வாங்கிய
தனது சைக்கிளை, பேரனுக்காக 500 ரூபாய்க்கு விற்று மேலும் 300 ரூபாய் கடன் பெற்று அந்த ரிமோட் காரை வாங்கி தனது பேரனுக்கு பரிசாக கொடுக்கிறார் தாத்தா.
அதைப் பார்த்த பேரன் மகிழ்ச்சி அடைந்து தாத்தாவைப் பெருமையாகப் பார்க்கிறான்.
அவனது சிரிப்பையும் சந்தோஷத்தையும் பார்த்த தாத்தா தான் சைக்கிள் விற்கும் போது பட்ட மன கஷ்டங்கள் எல்லாத்தையும் மறந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
தாத்தாவின் மனைவி எப்படிங்க இந்த சைக்கிளை நீங்க வித்திங்க உங்களுக்கு மன கவலை ஏதும் இல்லையா? என்று கேட்கும்போது பேரனின் மகிழ்ச்சியை விட இதெல்லாம் பெரிதில்லை என்கிறார்.இது தான் இக் குறும்படத்தின் கதை.
தாத்தா பேரன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசை பிணப்பை நம் கண் முன்னே எதார்த்தமாகவும் இயல்பாகவும் காட்டியுள்ளார் இயக்குனர் நரேஷ்.
பேரனின் சிரிப்பில் தாத்தாக்கு வரும் அளவில்லா மகிழ்ச்சியும் சந்தோசமும் வரும் காட்சிகள் பார்வையாளர்கள் மனதை நெகிழ வைத்துள்ளார் ஜனகராஜ்.
அவரது தோற்றமும்,உடலும், உடல் மொழியும், குரலும் அச்சு அசலாக அந்த ஏழைத் தாத்தாவாகவே வாழ்ந்துள்ளார்.
தனது கடந்த கால ஏக்கம்,காதல்,அன்பு, பாசம்,துயரம்,பூரிப்பு என இந்த குறும்படத்தில் அவரது முக பாவனைகள் அனைத்தையும் தனது அனுபவ நடிப்பில் அசத்தியுள்ளார்.
ஜனகராஜ் மனைவியாக நடித்துள்ள(ஏ.ரேவதி) அன்பு காட்டும் பாட்டியாக நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்து உள்ளார்.
பேரன் சரணாக வரும் சிறுவன் ஞானஷ்யாம் எதார்த்தமாகவும், இயல்பாகவும் நடித்துள்ளான்.
ஜனகராஜின் மகனாக வரும் ரிஷி தமிழ்,மலையாளப் படங்கள் மற்றும் இணைய தொடர்களில் நடித்துள்ள இவர் இந்த குறும்படத்தில் சில காட்சிகளில் வலம் வந்தாலும் தனக்கு கொடுத்த கதா பாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பாக நடித்துள்ளார்.
வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகன் மந்திரம் நானும் ஒரு நடிகன் தான் என்று அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்த குறும்படம் மூலம் பெருமை சேர்த்துள்ளார்.
பழைய பொருட்கள் வாங்கும் 'காயலான் ' கடைக்காரராக யோகி தேவராஜ் மற்றும் பொம்மைக் கடைக்காரராக வரும் ராயல் பிரபாகர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயற்கை ஒளியில் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத் ராஜா.
படத்தின் காட்சிகள் அனைத்தும் இயல்பாகவும் சிறப்பாகவும் பணியாற்றியுள்ளார் கலை இயக்குநர் வீரசமர் .
எடிட்டர் நாஷின் படத்தொகுப்பு அருமை.
அமினா ரஃபீக், சந்தோஷ் ஆகியோரது பின்னணி இசை குறும் படத்திற்கு கூடுதல் பலம்.