ராமர் கோவில் திறப்பு விழா: பங்குச்சந்தை வர்த்தக நேரம் மாற்றம்.. இன்றும் செயல்படும் என அறிவிப்பு

Mahendran
சனி, 20 ஜனவரி 2024 (09:32 IST)
ராமர் கோவில் திறப்பு விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளதை அடுத்து அன்றைய தினம் பங்குச்சந்தை நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக இன்றும் பங்குச்சந்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி 22ஆம் தேதி பங்குச்சந்தை காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2:30 மணிக்கு வர்த்தகம் தொடங்கி மாலை 5 மணி வரை செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
அதற்கு பதிலாக இன்று பங்குச்சந்தை வர்த்தகம் செயல்படும் என்றும் இன்று காலை 9.15 மணிக்கு முதல் தொடங்கி 3.30 வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தக தீர்வுகள் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்