ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் முதல்முறையாக ஏற்றத்தில் பங்குச்சந்தை..!

Siva
புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:51 IST)
கடந்த வாரம் ஹிண்டன்பர்க்  அறிக்கை வெளியானதில் இருந்து நேற்றும், நேற்று முன் தினமும் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

அதானி நிறுவனங்களின் பங்குகளை செபி தலைவர் மாதபி புரி புச் என்பவர் வாங்கி உள்ளார் என்றும் அதனால் தான் அதானி நிறுவனங்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்த வாரம் வெளியானது.

இந்த அறிக்கை காரணமாக இந்திய பங்குச் சந்தை மிக மோசமாக சரியும் என்று எதிர்பார்த்த நிலையில் ஓரளவு சரிந்தது என்பதும் இந்த நிலையில் இன்று பங்கு சந்தை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 79,100 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 24,125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் ஆகிய  பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி, மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்