தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

Siva
செவ்வாய், 28 மே 2024 (13:16 IST)
தேர்தல் முடிவு காரணமாக பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதை அடுத்து பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மந்தமாக செயல்பட்டு வருகிறது. 
 
பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருப்பதாகவும் பங்குச்சந்தையில் புதிய முதலீடு செய்ய தற்போது முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உள்ளது 
 
மும்பை பங்குச்சந்தை வெறும் 20 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 75 ஆயிரத்து 414 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிவருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி வெறும் 11 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 22,944 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் அனைத்து நிறுவனத்தின் பங்குகளும் பெரிய அளவில் ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அந்த முடிவுகள் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்