இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பு.
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ஏராளமான கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி இருப்பு வைத்துள்ளதால் தான் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஏற்பட்ட போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது