சிசிடிவி கேமராக்கள்: உலக அளவில் சென்னைக்கு கிடைத்த பெருமை!

வெள்ளி, 18 நவம்பர் 2022 (12:51 IST)
சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் வகையில் சென்னை உலக அளவில் சாதனை செய்துள்ளதை அடுத்து சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
சிசிடிவி கேமராக்கள் என்பது தற்போதைய உலகில் இன்றியமையாதது என்றும் குற்றம் நடக்கும் போது சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் அதிக சிசிடிவி கேமராக்கள் வைத்திருக்கும் நகரங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது 
 
இந்த பட்டியலில் உலக அளவில் சென்னைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு வரை 150 முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்டுள்ள டேட்டாவின் படி சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 609 சிசிடிவி கேமராக்கள் உள்ளது
 
இந்த பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும் மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்