நேற்று மற்றும் நேற்று முன்தினம் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சரிவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் இந்திய பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 61,930 என்ற புள்ளைகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 18,330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை பங்கு சந்தை சரிவில் தொடங்கினாலும் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச் சந்தையில் இன்று முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.