பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (09:25 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 95 புள்ளிகள் சார்ந்து 60 ஆயிரத்து 254 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 17738 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் சில மாதங்கள் கழித்தே பங்குச்சந்தை உச்சத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
எனவே புதிதாக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் பங்குச்சந்தை நிபுணர்களுடன் கலந்து ஆலோசத்து முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்