நீண்ட இடைவெளிக்கு பின் சென்செக்ஸ் ஏற்றம்.. 400 புள்ளிகள் உயர்ந்ததால் மகிழ்ச்சி..!

புதன், 1 மார்ச் 2023 (11:25 IST)
அதானி விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து வந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்தனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சென்செக்ஸ் 400 புள்ளிகளும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் சற்றுமுன் 405 புள்ளிகள் உயர்ந்து 59,366 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 125 புள்ளிகள் உயர்ந்து 17,425 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இதே ரீதியில் பங்குச்சந்தை சென்றால் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மீண்டும் 62,000ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்