நகை வாங்க முந்தியடிக்கும் மக்கள் கூட்டம்: சவரனுக்கு ரூ.480 குறைவு!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:41 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480குறைந்துள்ளது.
 
சர்வதேசச் சந்தையில் உலகம் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்ததை அடுத்து தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. தொடந்து தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்த வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 35,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 
அதே போல் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 8 கிராம் 37,952 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும்  வெள்ளியின் விலை, ரூ.69 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்