தேர்தல் பிரச்சாரத்தின் போது போக்குவரத்து நெரிசல்-தொடர்ந்து வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்துக் கொண்டிருந்ததால் எரிச்சல் அடைந்த ஜிகே வாசன்....

J.Durai
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (09:24 IST)
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.
 
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி கே வாசன்  குமாரபாளையத்தில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
நகரம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் குமாரபாளையத்திள் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூடி இருந்த மக்களிடம் வாக்குகள் சேகரித்தார் அப்பொழுது அவர் பேசிக் கொண்டிருந்த பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
 
ஜி.கே.வாசன் பிரச்சாரத்திற்கு இடையூறாக தொடர்ந்து  வாகனங்களில் ஹாரன்களை சத்தம் எழுப்பிய படியே இருந்தனர் இதனால் எரிச்சல் அடைந்த ஜிகே வாசன் நம்மால் யாருக்கும் தொந்தரவுகள் வேண்டாம் வாகன ஓட்டிகளுக்கு அவசரமாக இருந்தால் வலி அமைத்து கொடுங்கள் என்று தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் தனது கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் ஆதரித்து பேசிக் கொண்டிருந்த பொழுது கூட்டணி தலைவர்களின் பெயரை உச்சரித்தார் அப்பொழுது அண்ணாமலை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோர் பெயரை உச்சரித்த பிறகு இபிஎஸ் என்றும் தொடர்ந்து உச்சரித்தார்.
 
இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் இதே பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது கொடுக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பில் ஒரு சதவீதம் கூட போலீசார் அந்த முக்கிய சாலை பகுதியில் இல்லை என பாஜக கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்