பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தொல் திருமாவளவனை ஆதரித்து- ஜவாஹிருல்லா தேர்தல் பரப்பரை!

J.Durai
புதன், 17 ஏப்ரல் 2024 (08:41 IST)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனர் ஜவாஹிருல்லா சிதம்பரம் மேல சன்னதியில் பிரச்சாரம் மேற்கோண்டார்.
 
அப்போது பேசிய ஜவாஹிருல்லா....
 
2014 ஆம் ஆண்டு பாரத பிரதமர் பதவியேற்ற நீங்கள் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினத்தில் இந்த ஆண்டு மட்டும் கேஸ் 100 ரூபாய் ஏற்றி உள்ளீர்கள்.
 
ஒவ்வொரு ஆண்டும் நூறு ரூபாய் குறைத்து இருந்தால் இந்த நேரம் கேஸ் விலை இலவசமாக கிடைக்கும்.
 
ஏன் செய்யவில்லை தேர்தலுக்காக தாய்மார்கள் ஓட்டை வேண்டும் என்று இப்போது 100 ரூபாய் குறைத்து உள்ளீர்கள்.
 
அதுமட்டுமல்ல நீங்கள் மிகப்பெரிய ஊழல் புரிந்துள்ளீர்கள் என்று நீதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் கூறி உள்ளார்.
 
இதற்கு என்ன பதில் கூற போகிறீர்கள் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல் திருமாவளவன் அவர்கள் பானை சின்னத்தில் போட்டியிட்டு அமோக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்