அ.ம.மு.க கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு

J.Durai

புதன், 17 ஏப்ரல் 2024 (08:37 IST)
தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம .மு .கழக வேட்பாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்:
 
தேனி நாடாளுமன்ற தொகுதியின் பிரத்யோக தேர்தல் வாக்குகள் என்று எடுத்துக் கூறினார்.
 
இதன் பின்னர் அரசியலை தாண்டி நான் இந்த ஊரோடு பின்னிப் பிணைந்து இருக்கிறேன் மக்களுக்கு ரூபாய் 300 .500. எனக்கு கொடுத்து ஓட்டு வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை மீண்டும் நான் வர வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள் நான் இந்த ஊரில் பிறக்கவில்லையே தவிர இந்த ஊரைச் சேர்ந்தவன் தான் தேனி பாராளுமன்ற தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மக்கள் விரும்பக்கூடிய இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் மக்களுக்கு பணம் கொடுப்பது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும் ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆனால் மக்களின் கருத்து ஜூன் 4-ஆம் தேதி தெரியும் அதுபோல தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் தேனி பாராளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் தொகுதியில் நடைபெறக்கூடிய சட்டவிராத செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்