ஆதாரத்துடன் அம்பலமானது தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சொத்து மதிப்பு

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (16:04 IST)
அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 
 
வேட்புமனு தாக்கலின் போது சுதீஷின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதவாது, கடந்த 5 ஆண்டுகளில் சுதீஷின் அசையும் சொத்துகளின் மதிப்பு 336% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மொத்த சொத்து 77% அதிகரித்துள்ளது. 
 
2014 ஆம் ஆண்டில் சேலம் மக்களவை தேர்தலில் தேமுதிக வேட்பாளராக சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்த போது தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் ரூ.33.91 கோடி அளவில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
 
ஆனால், இப்போது சுதீஷின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.17.18 கோடி, அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.42.99 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்