அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (11:58 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
 
* அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்
 
* உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்
 
* வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து வறட்சியின் போது பயன்படுத்த திட்டம் கொண்டுவரப்படும்
 
* மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்
 
* விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்
 
* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்
 
* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
 
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும் 
 
* கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
 
* வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் 
 
* இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை
 
* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை
 
* மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை
 
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்படும் 
 
* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
 
* காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்
 
* தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு 
 
* இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும்
 
* காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
 
* மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்