தொலைந்து போன சாவி - பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:39 IST)
மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து போனதால் பூட்டினை அதிகாரிகள் உடைத்தனர். 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதுதவிர தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் கடலூர் மாநகராட்சியில் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து போனதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது. பின்னர் வேறு வழியில்லாமல் அறையின் பூட்டினை அதிகாரிகள் உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
 
இதே போல கிருஷ்ணன்கோயிலில் உள்ள மையத்தில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்