குலுக்கல்ல கூட ஜெயிக்க முடியலயே... பாஜகவிடம் வீழ்ந்த அதிமுக!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:15 IST)
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் அதிமுகவை வீழூத்தி பாஜக வேட்பாளர் வெற்றி. 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதுதவிர தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள் தலா 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் குலுக்கலில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்