நமக்கு நாமே - வீழ்வதில் இருந்து எழுவது - சிறப்புக்கட்டுரை

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (23:46 IST)
இந்த உலகில் எதற்குமொரு விலையுண்டு  என்று நம்புகின்ற மனிதர்களின் வாழ்வில் எத்தனை விதமான பிரச்சனைகள் எழுகிறது.

இந்தப் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பென்று கருதுகிறவர்கள் அதை அனுபவமாகக் கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெருகிறார்கள்.

துளிக்கியூண்டு பிரச்சனைகளைக்கூட  பூதாகரமென்று கருதிப் புலம்புகிறவர்கள் எல்லாம் துன்பத்தைத் தலைக்குவைத்து ஒவ்வொரு கனமும்  நொடிந்துபோகிறார்கள்.

எத்தனயோ எதிர்ப்புகளும் எதிர்ப்பாராத திருப்புமுனைகளும்  மிகுந்துள்ள வாழ்க்கையில் நம்மை நாமே நங்கு உற்றுப்பார்த்து வந்தாலே ஆயிரம்  நாம் சந்திக்கின்ற அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து நம் உயர்வதற்கான ஆயிரம் வழிகளும் வாய்ப்புகளும் இருப்பதை நான் கண்ணாரக் காணமுடியும்!

இன்பத்தை மகிழ்ச்சியிலும், துன்பத்தை கஷ்டகாலத்தில் மட்டும் காணுகின்ற மனப்போக்கு கொண்டிருப்பவர்களுக்கு கடினமான காலத்தைக் கடந்துபோய்விட முடியாது.

இயேசுவின் மரணத்திற்குப் பின் இந்த மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்காகத்தான் அவர்ன் தான் உயிருடன் இருக்கும் போதிலிருந்ததே தனக்கான சீடர்களை உடன் வைத்துக் கொண்டார். 12 சீடர்கள் உலகம் முழுவதுமுள்ள பல தேசங்கள், பிரதேசங்களைக் கடந்து, இயேசு தங்களுக்குப் போதித்ததையும், கடவுள் தீர்க்க தரிசனமாக தங்களுக்கு உரைத்தவற்றையும்  தங்கள் அனுபவத்துடன் இணைந்து தேச செய்தியாகப் பரப்பினர்.

இயேசுவின் சீடரான யூதாஸே அவரைக் காட்டிக் கொடுத்து, அவரது சொந்த யூதமக்களே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைகின்றபோது, அவரோ, உலகின் பாவிகளை இரட்சித்து, இந்த உலகின் பாவத்தை சுமப்பதற்கான குறீயீடாக சிலுவையைச் சுமந்தாலும், அவரது இரத்தம் சிந்திய மரணமும் வெகுளித்தனமாக அவரது குற்றமில்லாத தூயப்பரிசுத்த  நிலையும்தான் அவரை கண்டம் விட்டு கண்டம், நாடு விட்டு நாடு, தேசம் விட்டு தேசம், கிராமம் விட்டு கிராமம் முழுவதும் அவரது மார்க்கத்தைப் பரப்பியது.
இயேசு மரித்து 2020 ஆண்டுகள் ஆகிவிட்டதென்றாலும் இன்று பல கிளைகளைப் பரப்பி அந்த கிறிஸ்தவ மதத்தில் பல நூரு வகைகள் இருந்தாலும் அதற்காக மூலக் கருவாக இயேசின் இளமைக்கால விடாமுயற்சிதான் காரணமாக அமைந்திருந்தது.

நம்மை நாமே வருத்திக் கொள்ளாமல் இந்த உலகில் யாராலும் எதுவும் சாதித்துக் கொள்ள முடியாது.

பாண்டவர்களுக்கும் கெளவர்களுக்கும் இடையேயேனா குருஷேத்திரப் போர் நடக்கும் முன்,, எத்தனை நாட்கள் இப்போர் இருக்கும் என கண்ணன் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

அப்போது,  மூத்தவரான பீஸ்மர், ஆசிரியரான துரோணர், கொடைவள்ளலான கர்ணன், வில்வித்தகனான அர்ஜூனன் ஆகியோர் யோசிக்காமல் தங்கள் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகக் கூறினர்.

ஆனால், பீமனின் மகனான கடோத் கஜனின் மகன் பார்பாரிகாவோ, தன்னால் ஒரு நிமிடத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் எனக் கூறினான்.
அதாவது, சிவனை  நோக்கிக் கடும் தவம் புரிந்ததால், சில வரங்களை எனக்குத் தந்தார். அதேபோல், எட்டுத்திசைகளுக்கும் அதிபதிகளாக இருந்த அஷ்டதிக்கு பாலகர்களை நோக்கித் தவமிருந்தால் அவர்கள் எனக்குச் சில வரமளித்திருந்தனர். அந்த வரம் என்னவென்றால், 3 அம்புகளை எனக்குக் கொடுத்தனர்.

அதில், முதல் அம்பில் எவரையும் அழிக்க முடியும், இரண்டாம் அம்பில் எவரையும் காக்க முடியும்,மூன்றாவது அம்பில், அழிக்க வேண்டும் என தீர்மானித்தவர்களை அழித்துவிடமுடியும் என்றான்.

இத்தனையொரு சக்திகொண்ட இந்த அம்பினால்தான் இப்படி  பார்பாரிகாகூறியதைக் கேட்ட கண்ணன் மாறுவேடத்தில் வந்து வனத்தில் வைத்த ஒரு சோதனையை செய்துகாட்டியபோது,  கண்ணன் நிஜமாலும்  அவனை சிறுவன் என எண்ணாது அவன் திறமையை மதித்தான்.

ஆனால், ஏற்கனவே தன் தாய்க்கு அளித்துள்ள சத்தியத்தின் படி பாரதப் போரில் எந்தப் பக்கம் பலம்குன்றுகிறதோ அங்கு தன் பலத்தைக் கொடுத்துக் காப்பதாகக் கூறியிருந்தான்.

இதைக்கேட்டு திகைத்த கண்ணன்,  துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலைக் கேட்டது மாதிரி பார்பாரிகாவிடம் அவனது தலையைக் கேட்கிறார்.

பின்னர், முனிவர் வேடம்கலைத்துத் தன் விஷ்வரூபத்தைக் காட்டிய திருமாலிடம் அவர் கேட்ட தன் தலைமைக் கொடுக்கத் துணிந்தாலும், இந்தக் குருஷேத்திரப் போரைத் தன் கண்ணால் பார்க்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறான்.

அதையேற்ற கண்ணம், அவன் தலையை ஒரு மலையின் மீது வைத்து, அவர் விருப்பப்படி அப்போரை பார்க்கவைத்தான்.

பார்பாரிகாவின் தலையை கண்ணன் கேட்டு வாங்கியதால், உலகமே அதிர்ந்த பாரதப் போர் பதினெட்டு நாள்ட்கள் நீடித்தது.  கடையில் இப்போரில் வென்ற பாண்டவர்கள் இப்போரில் தங்களின் வெற்றிக்கு முக்கியப்பங்கு வகித்தவர் யாரென்று விவாதித்தனர்.

மலைக்குன்றின் மீது தலைமட்டுமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த பார்பாகிகாவிடன் கண்ணன் கேட்கவே,  நீயும் உன் யோசனையும் தான் காரணம் என்று அவன் கூறவே,  ரூபாவதி நதியில் அவன் தலையைத் தோய்த்ததும் அவனுக்கு உடல் வந்து சேர்ந்தது.

கண்ணனின் ஆசிரியும் பார்பாரிகாவுக்குக் கிடைத்தது. எப்போது, எந்த நேரத்தில் எந்தச் சூழலில் நமக்கு என்ன வருகின்றதென யாராலுன் கணிக்க முடியாது.

ஆனால் வருவதை எதிர்கொண்டு நமக்கு  நாமே எப்போதும் எதற்கும் தயாராகி எதையும் சந்திக்கத் துணிந்தாலே வெற்றியென்பது நம் வசம் வரும்.

 #சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்