“தேசிய விருது என்பது இப்போது நகைச்சுவை ஆகிவிட்டது…” மூத்த இயக்குனர் குற்றச்சாட்டு

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:12 IST)
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான ஆடூர் கோபாலகிருஷ்ணன் தேசிய விருதுகள் பற்றிய தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழாவில் கோழிக்கோட்டில் நடைபெற்றது. அதில் மூத்த இயக்குனர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இப்போதெல்லாம் தேசிய விருதுகள் என்பதே நகைச்சுவை ஆகிவிட்டது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் “முன்பெல்லாம் தேசிய விருது நடுவர்கள் கலைஞர்களாகவும், நல்ல விமர்சகர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் யாரென்றே தெரியாத நடுவர்கள் குழுவில் உள்ளனர். அவர்கள் என்ன அளவுகோல்களை வைத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. பெரிய வெற்றி பெற்ற படங்களுக்குதான் அவர்கள் விருது வழங்குகிறார்கள். அவர்களிடம் சிறந்த படங்களின் பட்டியல் கூட இல்லை. அவர்கள் சினிமாவை ஒரு பொழுதுபோக்காக கருதுகின்றனர். கேரள திரையுலகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்ப்டுகிறது. பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள்தான் நடுவர்களாக இருக்கின்றனர். ” என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்