நமது உணவுப் பழக்க வழக்கம் !- சினோஜ் கட்டுரைகள்

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (23:08 IST)
நம் நாடு வெப்படமண்டல நாடு! இங்குள்ள தட்பவெப்பத்திற்கு நம்மால் தாக்குப்பிடித்த மாதிரி ஐரோப்பிய  நாட்டுக் குளிர்களினூடாகத் தாக்குப்பிடிக்க முடியாது. அதேபோல்,  ஐரோப்பிய நாட்டு மக்களால், நம் நாட்டிற்கு வந்து தாக்குப் பிடிக்க முடியாது. உண்வுமுறைகளும் அப்படித்தான்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற ஒரு சீதோஷ்ண நிலை இருக்கும். நம் தமிழக விவசாயிகள் தலையில் முண்டாசுகட்டிவிட்டு, களத்துமேட்டில் களமிறங்கி வயற்காட்டில் சேற்றில் காலை நுழைத்துச் சிரித்துக் கொண்டே  விவசாயம் செய்வதைப்போன்று, ராஜஸ்தானில், தலையில் படுதா கட்டிக்கொண்டு, வெயிலிருந்து தலையைப் பாதுக்காக வேண்டிய ஒரு நீண்ட துணியால் அடுக்காய் அழகாய் கட்டிக் கொண்டு செல்வர். அது  பார்ப்பதற்கு எடுப்பாய் இருக்கும்!

ஆனால், ஒரே நாட்டில் இருக்கும்  இங்குள்ள மக்களிடையே கூட உணவிலும்,  உடையிலும் மாறுபாடுவுண்டாகிற போது,  மன  நிலையைச் சொல்லவா வேண்டும்?

 நம் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பற்றியறிய உதவுவது சங்க கால இலக்கியம்! இந்தச் சங்ககாலயிலக்கியத்தின் வாயிலாகத்தான் அக்காலத் தமிழர்கள் அறுசுவையுணவு உண்டு வாழ்ந்து, தானுண்பதையே அக்கம் பக்கத்திலுள்ளோருக்குப் பகுத்துண்டு கொடுத்து வாழ்ந்து பண்போடு அன்பைப் பேணி வந்தார்கள்.

ஐந்து வகை நிலங்களில் வாழ்ந்த மக்களும் தங்கள் நிலத்திற்கேயுரிய உடமைகளையும், உணவையும்  உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையாக  ஆத்மார்த்தமாகவே வைத்துக் கொண்டனர்.

இது தற்காலத்தில் குறைந்து வருவது கவலையளிக்கும்  ஒன்றுதான். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தினை வகைத் தானியங்களைப் பயிர்செய்து அதை உண்டு உடல் ஆரோக்கியம் பேணி வந்தனர்.

தினையில் நார்ச்சத்திருந்ததால், அதைத் தின்பதின் மூலம் தங்களின் உடலைப் பலம் பொருந்தியதாக்கி, அந்த மலையில் தாங்கள் வாழ்வதற்கான உடலுழைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தினையுண்பதால், வயிறு, குடல், கணையம் உள்ளிட்ட உறுப்புகள் பலம் பெருகுவதாகவும்,  வெப்பம்மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு இந்த தினைக் கஞ்சி குடிப்பதால், ஜீரணசக்தி இலகுவாக இருக்கும் என்பதாலும், மூளைச் செல்களுக்குப் புத்துணர்ச்சி இருக்குமென்பதாலும்,  குழந்தைகளுக்கு இது ஆர்வத்துடன் கொடுக்கப்படுகிறது.

ஆனால், நம்மிடையே இது குறைந்து வருவதுபோன்றே தோன்றுகிறது. இந்தச் சிறந்த உணவுகள் மூலம் தன நம் உடலும் மனமும் அனுதினமும் கட்டமைப்படுகிறது.

உடல் பலனின்றி எந்தச் செயலையும் நம்மால் செய்யமுடியாது. அதற்கான  ஆர்வம் கூட நம்மிடம் தோன்றாது.

மிகப்பெரிய காரியங்கள் செய்வதற்காக, போதைப் பொருட்கள் உப யோகிப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான உணவுமுறைகளில் மாணவர்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்தினால், அவர்கள் எளிதில் மனச்சோர்வதிலிருந்து காப்பாற்றும்.

மேற்கத்திய உணவுமுறைகளுக்கு வெகுவாகப் பழக்கப்படுத்தி வரும் நாமும்,  நம் பாரபரிய உணவுமுறைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தினால்,அது மேலும், உயிர்ப்புடன் இருக்கும்.  இயற்கையில் கிடைகிற அதே ஆற்றம் இந்த உணவுப் பயிர்கள் மூலம் கிடைக்கும்.
ALSO READ: சுவர் இருந்தால்தானே சித்திரம் ? சினோஜ் கட்டுரைகள்
 
அந்த காலத்து ஆள் என்று சொல்லுகின்ற மனிதர்கள் எல்லாரும்,  நவீன உணவுப் பழக்கத்தை அறியாதவர்கள். ஆனால், அவர்கள்தான், தஞ்சாவூர் கோயில்களையும், மகாபலிபுரம் சிற்பங்களையும், எலிபெண்டா குகை கோயில்களையும், எகிப்து பிரமிடு போன்ற வானுயர கோபுரங்களையும் எந்த விஞ் ஞானத் தொழில் நுட்பமின்றி, அறிவார்ந்த முறையில் உடல் மற்றும் மனதிட்பம் மூலம் உலகம் அழிந்தாலும் அசையாத அதியசங்களை எல்லாம் படைத்தளித்தனர்.

இதை நாமும் அறிந்துகொள்ள முற்படுவோம்.
 
#சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்