இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள் - சிம்புவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (09:14 IST)
நடிகர் சிம்பு - கமல் ஹாசன் புதிய படத்தில் இணைந்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட புகழ் நடிகர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்குகிறார்.  
 
இதனை கமல் ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் நல்ல ரோல்களில் நடிக்க காட்டுப்பசியில் இருப்பதாக சிம்பு கூறி இருந்த நிலையில், ‘காட்டுப்பசிக்கு’ விருந்து! என இயக்குனர் இந்த படத்தை குறிப்பிட்டு இருக்கிறார். 
 
இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகியது. இதனை 'கனவு நிஜமாகிவிட்டது'  என சிம்பு கூறிய நிலையில் தற்போது , கமல் ஹாசன், சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள் சிம்பு என கூறியுள்ளார். மிரட்டலாக இந்த ப்ரோமோவை பார்த்தால் கேங்ஸ்டர் படமாக இருக்கு என யூகிக்கமுடிகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Turmeric Media (@turmericmedia)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்