பிரம்மிப்பூட்டும் விக்ரமின் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (17:09 IST)
விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்
 
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார்.
 
அந்த வகையில் சற்றுமுன் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெறித்தனமான இந்த போஸ்டர் சியான் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்