இந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது விக்ரம் ‘கோப்ரா’ படத்தில் 10 கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் அந்த 10 கேரக்டர்களின் கெட்டப்புகளையும் ஒரே பர்ஸ்ட்லுக்கில் வெளியிட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கேரக்டரின் போட்டோஷூட் ஒவ்வொரு நாள் நடைபெறுவதால் இந்த பர்ஸ்ட் லுக் வெளியிட கால தாமதமாகி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் கண்டிப்பாக இந்த பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறியுள்ளனர்
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது