மாமனாருடன் நடிக்கும் ஒல்லி நடிகர்?

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (16:59 IST)
உச்ச நட்சத்திரம் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருடைய மருமகனான ஒல்லி நடிகரும் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

 
 
மலேசிய டான் கதையை எடுத்த இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் உச்ச நட்சத்திரம். இந்தப் படத்தை, ஒல்லியே  தன்னுடைய நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆந்திராவில் இதற்காக  செட் போட்டு இருக்கிறார்கள். 
 
இந்நிலையில், இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம் ஒல்லி. என்னதான் மாமனாராக இருந்தாலும்,  இதுவரை அவருடன் இணைந்து ஒல்லி நடிகர் நடித்ததில்லை. இந்தப் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக நடிக்கப்  போகின்றனர். இந்தப் படத்துக்குப் பிறகு ஒல்லியின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் உச்ச நட்சத்திரம் என்கிறார்கள். கடந்த  இரண்டு நாட்களாக இதே பேச்சுத்தான்.
அடுத்த கட்டுரையில்