தன்ஷிகாவை அவமதித்த டி.ஆருக்கு பிரபல இயக்குனர் கண்டனம்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (06:55 IST)
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை தன்ஷிகா குறிப்பிட மறந்ததற்காக ஓவர் பில்டப் செய்த டி.ராஜேந்தருக்கு விஷால் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஒட்டு மொத்த திரையுலகமே டி.ஆருக்கு எதிராக திரும்பியுள்ளது.



 
 
மரியாதை என்பது தானாக கேட்டு வரவேண்டிய ஒரு விஷயம். அதை வலுக்கட்டாயமாக எதிர்பார்க்கும் டி.ஆர், சபை நாகரீகம் இல்லாமல் சபை நாகரீகம் குறித்து பேசியது அனைவரையும் அருவருக்க வைத்துள்ளது.
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி, டிஆரின் செயலுக்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கண்டன டுவீட்டை சீனுராமசாமி டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்