வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற நயன்தாரா முடிவா?

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (17:40 IST)
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. 
 
சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடன் சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்றபோது நெற்றி வகிட்டில் நயன்தாரா குங்குமம் வைத்து இருந்ததால் அவருக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, பிரியங்கா சோப்ரா போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் குழந்தை விஷயத்தில் இன்னும் விக்னேஷ் சிவன் நயன்தாரா எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்