இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் விஜய் பீஸ்ட் படத்தை ஒரு நாள் முன் கூட்டியே ஏப்ரல் 13 புதன் கிழமை ரிலீஸ் செய்ய சொல்லிக் கேட்டுள்ளாராம். அதனால் அதிக திரைகளில் ரிலீஸ் செய்து முதல் நாள் வசூலை அள்ளலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகவுள்ள படங்கள் பட்டியலை தேதியோடு பகிர்ந்திருந்தார். அந்த பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து பீஸ்ட் ரிலீஸ் தேதி இதுதானா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.